நீயும் நானும் - கவிதை
—————--------------------—
கூட வரும் தோழிகட்கு
வேலை இல்லை
கொஞ்சிச் சிரித்தபடி
பேச்சுத் தொல்லை
பேச வரும் எனக்கந்தத்
தனிமை இல்லை
பார்த்தபடி இருப்பதுவும்
இன்பத் தொல்லை
எங்கே நீ போனாலும்
சுற்றிக் கூட்டம்
சுற்றமும் நட்புமாய்
அரட்டைக் கூட்டம்
நெருங்கிப் போய் நின்றாலோ
பார்வை கிட்டும்
நினைப்பதெல்லாம் பேசாமல்
நேரம் கொட்டும்
உனக்கெல்லாம் இனிமேலே
எதற்குத் தோழி
என்னோடு மட்டும் தான்
இருப்பாய் வாடி
—————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அப்படிப் போடு...
பதிலளிநீக்கு