புகைப் படம் - குறுங்கதை
——————————————-
இந்தப் புகைப்படத்தை ஏன் அனுப்பினாள் வாட்சப்பில் இப்போது . வளர்த்து ஆளாக்கிய அண்ணன் குடும்பத்திற்கே தன் வேலை , வாழ்க்கை எல்லாம் பயன் பட வேண்டும் என்று மறுத்து ஒதுக்கினாளே என் காதலை . அந்த விரல்களின் குழைவிலும் , கண்களின் கருணையிலும் மூக்கு நுனிக் குறும்பிலும் மயங்கிக் கிடந்தேனே .
இந்தப் புகைப்படத்தில் விரல்களில் காயம் , கண்களில் சோகம் காண்பித்து , மூக்கு நுனியை மறைத்து , கண்ணோரக் காயத்தையும் மறைத்து , அண்ணனின் கொடுமை மறுபடி ஆரம்பித்து விட்டதைச் சொல்கிறாளா . கடமையை விடுத்து காதலுக்குத் தயார் என்று காட்டும் சைகையா இது . .உன் சோக முக்காடைத் தூக்கி விட்டு , மறைத்த மூக்கு நுனிக் குறும்பை மறுபடியும் கொண்டு வருவேன் . இந்தப் பதிலைப் படித்து விட்டு பத்திரமாய் இரு கண்ணே .
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு