செவ்வாய், 23 மே, 2023

நகரத்தின் மறுபக்கம் - கவிதை

 நகரத்தின் மறுபக்கம் - கவிதை 

————————-------------------------—

பகலின் வெளிச்சத்தில்

பதுங்கியுள்ள எண்ணமெல்லாம் 


பாய்கின்ற  பயங்கரமே 

நகரத்தின் மறுபக்கம்


இருட்டியபின் ஆரம்பிக்கும்

இருண்ட பக்கமது 


கை மாறும் காசுகளின்

பின்னணியில் பிசாசுகள்


காமப் பிசாசு

வன்முறைப் பிசாசு


பிசாசுகளின் ஆட்டத்தில்

இரவுக்கே பயம் எடுக்கும் 


எப்போது விடியும் என்று

காத்திருக்கும் கதிருக்கு


—————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...