நேற்றுப் போட்ட கோலங்கள் - கவிதை
————————————----------------------------—-
சிறுபிள்ளைக் காலம் தெருவெங்கும் ஓட்டம்
சிரித்திட்ட தெல்லாம் மனமெங்கும் ஓட்டம்
படித்திட்ட காலம் மனப்பாட வேகம்
பழகிட்ட நட்பு பசுஞ்சோலைப் பாகம்
முடித்திட்ட பள்ளி கல்லூரிப் பாடம்
மூழ்கிட்ட நேரம் இளங்காதல் ஓடம்
வேலையைத் தேடி வெயிலிலே வாடி
வெந்திடும் போது வேதனை கோடி
பாலையில் ஓடி சோலையை நாடி
வேலையில் சேர்ந்ததும் சேலையைத் தேடி
திருமண உறவினில் திளைத்திட நேரும்
தெறித்திடும் முத்தென மழலைகள் சேரும்
இருமனம் ஒன்றாய் இறுகிப் போகும்
இன்பமும் துன்பமும் ஒன்றென ஆகும்
முதுமையில் தளர்ந்து உணர்வுகள் ஓயும்
முடிகிற நேரம் பூமியில் சாயும்
நேற்றுப் போட்ட கோலங்கள் போகும்
காற்றில் கலந்து கவிதைகள் ஆகும்
————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை,..
பதிலளிநீக்கு