வேரோடு விழுகிறேன் - கவிதை
—————————------------------------
அசை போட்டபடி அடிமாடுகள்
அமைதியாக லாரியில்
அழுகை வருகிறது
பழுப்புச் சிறகுகள் காற்றில்
பறந்து வந்து விழுகின்றன
பரிதாபமாக இருக்கிறது
குழம்பிப் போய்ப் பச்சைக்
குளமாய்ச் சாக்கடை
குழப்பமாக இருக்கிறது
உடைந்து போன சைக்கிள்
ஒட்டடையோடு ஓரமாக
உறக்கம் வரவில்லை
பக்கத்து வீட்டில் இன்று
பதினாறாம் நாள் காரியம்
பதட்டமாக இருக்கிறது
எல்லாவற்றுக்கும் காரணம்
எனக்கு வயது
எண்பதைத் தாண்டியதா
விளக்குகள் அணைந்து
வெறுமை இருட்டு
வேரோடு விழுகிறேன்
———————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
பயம்...?
பதிலளிநீக்கு