வெள்ளி, 19 மே, 2023

ஏனென்றே தெரியவில்லை - கவிதை

 ஏனென்றே  தெரியவில்லை - கவிதை 

—————————--------------------------------—-

ஏன் இந்தக்  கல்லூரி

பதில் தெரியாது

பணத்தைக் கொடுத்து

இடம் பிடித்தாகி விட்டது


ஏன் இத்தனை புத்தகம்

பதில் தெரியாது

வாங்கி அலமாரியில்

அடுக்கி வைத்தாகி விட்டது


ஏன் இந்தப் பரீட்சை

பதில் தெரியாது

மனப்பாடம் செய்து

பாஸ் செய்தாகி விட்டது


ஏன் இந்த  வேலை

பதில் தெரியாது

கிடைத்த வேலையில்

சேர்ந்தாகி விட்டது


ஏன் இந்த வாழ்க்கை

பதில் தெரியாது

இருந்து  வாழ்ந்து 

முடித்தாகி விட்டது 


——————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...