தாய் மடி தேடுகிறேன் - கவிதை
—————————---------------------—
இங்கே கொஞ்சம் பாரேண்டி -என்
இதயப் பூவைத் தாரேண்டி
அங்கே இருந்தே சிரியேண்டி -என்
ஆசைப் பூவைப் பிரியேண்டி
சும்மா பாத்துப் போயேண்டி -நான்
சொக்கும் சுகத்தைத் தாயேண்டி
தம்மாத் தூண்டு பேசேண்டி - உன்
தமிழை என்மேல் பூசேண்டி
வேர்த்துப் போயிக் கிடக்கேண்டி - காதல்
வெக்கைத் தீயை அடக்கேண்டி
பார்த்துப் பார்த்து ஆசையடி - உன்
பாதம் காதல் ஓசையடி
பயந்து கிடந்து சாகுறேண்டி - உன்னைப்
பார்த்துப் பைத்தியம் ஆகுறேண்டி
நயந்து பேசத் தயங்குறேண்டி - நீ
நடந்து வருகையில் மயங்குறேண்டி
போன பிறகு குழம்புறேண்டி - நீ
போன பாதையில் புலம்புறேண்டி
தானாக் கிடக்கிறேன் வாயேண்டி - அந்தத்
தாயின் மடியைத் தாயேண்டி
————————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ரசனையான வரிகள்...
பதிலளிநீக்கு