ஞாயிறு, 14 மே, 2023

வாழ்தலே வெற்றி - கவிதை

 வாழ்தலே வெற்றி - கவிதை 

———————----------------------—-

ஓடும் மரங்கள் கட்டிடங்கள்

காட்சி மாறும் அதிசயங்கள்


ஒவ்வொரு ஸ்டேஷன் வந்தவுடன்

காப்பி பலகார வாசனைகள்


சீட்டுக் கட்டுக் கச்சேரி

சில்லறைச்  சண்டை சச்சரவு


பாட்டுப் பாடும் ஒரு கூட்டம்

பசியில் அலறும் சிறு பிள்ளை


ஓரமாய்ச் சீட்டில் உட்கார்ந்தால்

உள்ளும் புறமும் உலகங்கள்


ஒவ்வொரு நொடியும் வாழ்தலின்

வெற்றியைக் காட்டும் விஷயங்கள்


——————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...