அணிலின் திகைப்பு - குறுங்கதை
————————-----------------------------——-
அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது .
‘என்ன ஆனது இங்கிருந்த என் மரம் .
அதில் ஒரு பொந்தில் நான் சேமித்து வைத்திருந்த கொட்டைகள் எங்கே .
நேற்று இரவு , பக்கத்துத் தெருவில் காதலி மரம் சென்று அங்கே கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டேன் .
அதற்குள் வெட்டிச் சாய்த்து விட்டார்களே என் மரத்தை , இந்த மனிதப் பதர்கள் .
இங்கு இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பேன் .
பிழைத்ததே பெரிய விஷயம் .
அடுத்து என் காதலி மரத்திற்கும் நாளை இதே கதி வந்து விடுமா .
உடனே சென்று அவளைக் கூட்டிக் கொண்டு பக்கத்துக் காட்டுக்கு ஓடி விட வேண்டும் .
இந்த மனிதர்கள் கொடியவர்கள் மட்டும் அல்ல , முட்டாள்களும் கூட .
நிழல் தரும் மரங்களை வெட்டி விட்டு சுற்றுப்புறச் சூடு அதிகரித்து வெந்து சாம்பலாகப் போகிறார்கள் .
நான் விரைந்து செல்ல வேண்டும் . ‘
சொந்தப் பொந்து இருந்த அந்த அடி மரத்தை ஒரு தரம் சோகத்தோடு முத்தமிட்டது .
அடுத்த முத்தத்திற்கு ஆவலோடு காதலியை நோக்கிக் குதித்து ஓடியது .
அந்தக் கொதிக்கும் வெயிலில் .
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
வேதனை...
பதிலளிநீக்கு