காபி ரெண்டு - குறுங்கதை
———————--------------------------
‘ ரெண்டு பேருக்கு மட்டும் காபி கொண்டு வந்துருக்கியே ‘
‘மூணு பேரு வந்துருக்கோம் , கண்ணு தெரியலையா ‘ .
குத்திக் காட்டினாள் வருங்கால மாமியார் .
‘ சொன்னேனே கேட்டியா , இப்ப பேச்சு வாங்கு ‘ என்று கிசு கிசுத்தாள் அம்மா .
‘ நீ சும்மா இரு அம்மா ‘ என்று அம்மாவை அடக்கினாள் சுதா .
‘இல்லே அத்தை , அவரு காபி குடிக்க மாட்டாருன்னு எனக்கும் தெரியும் ’ என்றாள் .
அலுவலகத்தில் பேசி வைத்து அவனை முறைப்படி பெண் பார்க்க வரச் சொன்ன அவளுக்குத் தெரியாதா அவனைப் பற்றி .
—————-நாகேந்திரபாரதி
My Poems/Stories in Tamil and English
அதானே...(!)
பதிலளிநீக்கு