வியாழன், 25 மே, 2023

கைம்பெண் கனவுகள் - கவிதை

 கைம்பெண் கனவுகள் - கவிதை 

——————————------------------—

‘கோரிக்கை அற்றுக் 

கிடக்குதண்ணே  ‘  என்றார்

புரட்சிக் கவிஞர் 


‘வேரிற்  பழுத்த பலாவின்  ‘

ஒவ்வொரு சுளையிலும்

ஒவ்வொரு கோரிக்கை 


மறுபடி திருமணம்

மறுபடி மணமகன்

மறுபடி கட்டில்


குழந்தைகள் வரவு

குடும்பத்தின் செலவு

கூடிடும் உறவு


இன்பமும் துன்பமும்

இணைந்திடும் வாழ்க்கை

இல்லற நல்லறம்


இறைவனின்  தயவில்

இறுதியில் முடிவு

இனித்திடும் சுளைகள்


——————நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...