செவ்வாய், 23 மே, 2023

மனசே .. மனசே … - கவிதை

 மனசே .. மனசே … - கவிதை 

——————————--------------------

நீ நடந்து வரும் போது

நடனம் பயில்கிறது மனசு


நீ தொட்டுப் பேசும் போது

தோகை விரிக்கிறது மனசு


நீ என்னைப் பார்க்கும் போது

இதழ்கள் திறக்கிறது மனசு


நீ புன்னகை செய்யும் போது

புதிதாய் மணக்கிறது மனசு


நீ காதல் செய்யும் போது

காற்றில் ஆடுகிறது மனசு


நீ கோபம் கொள்ளும் போது

கொஞ்சம் சிரிக்கிறது மனசு


நீ கண்ணீர் வடிக்கும் போது

கசங்கிப் போகிறது மனசு


நீ பிரிந்து செல்லும் போது

பிய்ந்து போகிறது மனசு


நீ திரும்பி வராத போது

தீயில் வேகிறது மனசு


நீ கனவில் வரும் போது

கண்ணீர் வடிக்கிறது மனசு


——————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...