ஞாயிறு, 14 மே, 2023

நஞ்சை புஞ்சை எல்லாம் … - கவிதை

 நஞ்சை புஞ்சை எல்லாம் … - கவிதை 

——————————--------------------------——-

உணவும் உடையும்

உறைவிடத் தேவையும்


மூன்றும்  தேவையென்று

முன்னோர்  சொல்லி வைத்தார்


உணவைக் கொடுத்த

நஞ்சை  புஞ்சை எல்லாம்


உறைவிடம் கொடுக்கும்

கட்டிடக் கழிவாய்


உடையைக் கொடுக்கும்

பஞ்சாலைப் புகையாய் 


மண்ணிலும் விண்ணிலும்

மாறிப் போனால்


கஞ்சிக்கு வழியெங்கே 

காற்றுக்கு உயிரெங்கே


————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...