ஞாயிறு, 21 மே, 2023

துணையாய் வா - கவிதை

 துணையாய் வா - கவிதை 

——————-------------------------—-

தன் மேல் நீர் விழுந்தாலும்

நீர் மேல் தான் தான் விழுந்தாலும்

தன்னை இழப்பது தீ தான்


பாடலில் மறைந்து இருந்தாலும்

இசைக்குள் ஒளிந்து இருந்தாலும்

இனிமை தருவது ஒலி தான்


மின்னலில் மின்னி வந்தாலும்

இடியில் இறங்கி வந்தாலும்

இடித்து விழுவது மேகம் தான்


தென்றலில் ஏறி வந்தாலும்

புயலில் சாடி வந்தாலும்

உருவம் மாறுவது காற்றுத்  தான்


தாவணி உடையில் வந்தாலும்

சேலையில் சிரித்து வந்தாலும்

இன்பம் தருவது அழகு தான்


அண்ணன் கூட வந்தாலும்

அப்பா சேர்ந்து வந்தாலும் - எனக்குத்

துணையாய் வருவது நீதான்

—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...