ஞாயிறு, 21 மே, 2023

அவலத்தின் உச்சம் - கவிதை

 அவலத்தின் உச்சம் - கவிதை 

—————————----------------

ஆனா ஆவன்னா ஈன்னா

எழுதிப் பார்த்த சிலேட்டு


சில்லரைக் காசைப் போட்டு

சேத்து முடிஞ்ச சுருக்குப் பை


சின்னப் பூவாய்ச் சேத்து

கோத்துக் கட்டிய மாலை


பாதி சப்பிய நிலையில்

சிதைந்து கிடைக்கும் ஐஸூ


பாத்துப் பாத்து வாங்கிய

முத்துக் கோத்த சங்கிலி


நாளை கொடுக்க எண்ணி

எழுதிய காதல் கடிதம்


ஊரைப் பாத்து முடித்து

திரும்பும் ரெயில்வே டிக்கெட்


வீட்டை விற்ற பணத்தில்

வாங்கி வைத்த நகைகள்


எத்தனை வருடம் அலைந்து

கிடைத்த வேலைச் சீட்டு


எல்லாம் சிதறிக் கிடக்கும்

வெடித்த உடல்கள் மேலே


வன்முறை வெறியில் எரியும்

அவலத்தின் உச்சம் அங்கே


——————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...