கரம் பிடித்த உறவு - கவிதை
————————-------------------—
எனக்கென்று வந்தவளே
எனக்காக வாழ்பவளே
உனக்கென்று உறவாகி
உரிமையிலே ஒன்றானேன்
மனத்துக்குள் இருக்கின்ற
மார்க்கத்தை அறிந்தேனா
குணத்துக்கு ஏற்றபடி
குழைவாக இருந்தேனா
தினத்துக்கும் உன்னோடு
தேனாகத் திரிந்தேனா
கணத்துக்கும் காலத்துக்கும்
காற்றாகக் கலந்தேனா
பணத்துக்கும் மனத்துக்கும்
பாதுகாப்பாய் இருந்தேனா
இனத்துக்கும் இணக்கமாய்
இருந்தோடி இழைந்தேனா
குணத்துக்குக் கோயிலே
கோபுரத்தின் வாயிலே
உனக்காக வாழ்வதில்
உல்லாசச் சாயலே
கரம் பிடித்த உறவே
கண்ணகியின் வரவே
உரம் எனக்கு நீயே
உளம் நிறைந்த தாயே
——————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான வரிகள்...
பதிலளிநீக்கு