போலி வேடங்கள் - கவிதை
————————-------------------—-
சிரிப்பில் ஒளிக்கும்
பொறாமை எத்தனை
பேச்சில் ஒளிக்கும்
கபடம் எத்தனை
செயலில் ஒளிக்கும்
சிறுமை எத்தனை
முன்னால் ஒன்றும்
பின்னால் ஒன்றுமாய்
நடத்தும் நாடகக்
காட்சி எத்தனை
வேடம் கலையும்
நேரம் வந்தால்
வீழும் மதிப்பு
எத்தனை எத்தனை
—————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
வீழ்ந்தே தீரும்...
பதிலளிநீக்கு