ஞாயிறு, 14 மே, 2023

மரணம் தீர்வல்ல - கவிதை

 மரணம் தீர்வல்ல - கவிதை 

———————------------------------—-

தற்கொலை முயற்சியில்

தப்பினோர் தம்மைக்

கேட்டுப்  பார்த்தால்

கிடைக்கும் பதில்கள்


மரணத்தை நெருங்கிய

அந்த நொடியினில்

வாழும் ஆசை

வந்ததா இல்லையா


உணர்ச்சியின் போக்கில்

உள்ளத்தை விடாமல் 

அறிவின் போக்கில்

ஆழமாய்ச் சிந்திப்போம்


வாழ்க்கை வாழ்வதற்கு

வசந்தம் வருவதற்குக் 

காத்துக் கிடந்தால் தான்

காலம் கனிந்து வரும்


சோர்வை விரட்டி விட்டு

சுயத்தைக் கிளப்பி விட்டு

நம்பிக்கை வைத்தால்

நடக்கும் எல்லாமே


எல்லோரும் ஒரு நாள்

இறக்கத் தான் போகிறோம்

உயிருள்ள  நாளில்

உழைப்பால்  உயர்ந்திடுவோம்


——————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...