வெள்ளி, 5 மே, 2023

ஒரு நதியின் பயணம் - கவிதை

 ஒரு நதியின் பயணம் - கவிதை 

—————————-----------------------—

கடலில் தொடங்கி

கடலில் முடியும்

வழியில் பார்த்த

வாழ்க்கை எத்தனை


விண்ணில்  ஏறி

விழுந்த இடத்தில்

பொங்கிப் புடைத்துப்

புரண்டு சுருண்டு


நீண்டு நடந்து

ஓடிக் களைத்து

அடங்கும்  வரைக்கும்

ஆட்டம் எத்தனை


கருவில் தொடங்கிக் 

கரையும் வரைக்கும்

இருக்கும்  வாழ்வின்

இன்ப துன்பம்


நதியின் பயண

நாட்டியம்  தானே

நடந்து முடியும்

நாடகம் தானே

————-நாகேந்திர பாரதி 

 My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...