எதையும் தாங்கும் இதயம்-கவிதை
—————————--------------------------——-
சளசளவென்று பேசிவிட்டுச்
சிலிர்த்துக் கிளம்பும் பறவைகள்
கோடு போட்டது போல்
வானத்து வீதி ஊர்வலம்
எங்கோ சென்று விட்டு
என்னவோ செய்து விட்டு
மாலையில் திரும்பி வரும்
சளசள சப்தம்
இரவின் அமைதியோடு
சேர்ந்து உறக்கம்
பகலை முழுமையாக
அனுபவிக்கும் வேகம்
போன வழியில்
பிழைத்தது எப்படி
வேட்டைக்குத் தப்பி
விரோதிக்குத் தப்பி
எவர் சொல்லித் தந்தார்
இந்தப் பறவைகட்கு
இன்றைய வாழ்வை
இனிதே வாழ்வதை
எதையும் தாங்கும்
இதயம் கொண்டு
இதுதான் வாழ்க்கை
என்று இருப்பதை
————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சூப்பர் கவிதை கவிஞரே
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு