வெள்ளி, 7 ஏப்ரல், 2023

எதிர் நீச்சல் - கவிதை

எதிர் நீச்சல் - கவிதை 

-------------------------------------------

கிட்டிக் கம்பும் கோலிக் குண்டும்

குழந்தைப் பருவ எதிர் நீச்சல்

பாடப் புத்தகமும் நோட்டுப் புத்தகமும்

பள்ளிப் பருவ எதிர் நீச்சல்


படியும் வேலையும் பருவத் திருமணமும்

இளமைப் பருவ  எதிர் நீச்சல்

குழந்தைப் பிறப்பும் வாலிப வளர்ப்பும்

குடும்பப் பருவ எதிர் நீச்சல்


பேரன் பேத்தி  மதிப்பு மானம்

ஓய்வுப் பருவ  எதிர் நீச்சல்

நோயும் பாயும் நொந்த உடம்பும்

முதுமைப் பருவ எதிர் நீச்சல்


உடலும் உயிரும் ஓயும் நீச்சல் 

கடலில் சேரும் நதியின் பாய்ச்சல்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...