ஆனந்தக் கண்ணீர் - கவிதை
—————————--------------------------
மணவறையில் குனிந்தபடி
முதலிரவில் மலர்ந்தபடி
தாயாகிக் கனிந்தபடி
பெரியோர்க்குப் பணிந்தபடி
பரிமாறி மகிழ்ந்தபடி
பிள்ளைகளை வளர்த்தபடி
கோயிலுக்குப் போனபடி
குடும்பங்கள் வளர்ந்தபடி
எப்போதும் சிரித்தபடி
எப்படிடி இப்படி
உன்னையே பார்த்தபடி
உள்ளமே நிறைந்தபடி
ஆனந்தக் கண்ணீரால்
கண்களே நிறைந்தபடி
—————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ரசித்தேன்....
பதிலளிநீக்கு