அத்தனைக்கும் ஆசைப்படு - கவிதை
——————————--------------------------------—-
படுக்கையைச் சுருட்டும் போதும்
பாத்திரம் கழுவும்போதும்
கும்மித் துவைக்கும் போதும்
குளித்து முடிக்கும் போதும்
சட்டினி அரைக்கும் போதும்
இட்டிலி வேகும் போதும்
டிவி அலறும் போதும்
குழந்தை அழும் போதும்
பிரார்த்தனை செய்யும் போதும்
பெரியவர் பாடும் போதும்
இரவுச் சிரிப்பின் போதும்
இன்ப உறவின் போதும்
அத்தனைக்கும் ஆசைப்பட்டுச்
செய்கின்ற காரணத்தால்
இருப்பதில் திருப்திதான்
இன்பமோ இன்பம் தான்
———————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
திருப்தி என்றும் எதிலும் வேண்டும்...
பதிலளிநீக்கு