வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கோடை மழை - கவிதை

 கோடை மழை - கவிதை 

———————------------------—

பங்குனி சித்திரைக் காலம்

பாலையாய்ப் படுத்திடும் கோலம்

கங்குடன் சிவந்திடும் கனலாய்க்

காற்றினில் வீசிடும் அனலாய்


தெருவினில் உருகிடும் மரத்தில்

தேம்பிடும் இலைகள் சுரத்தில்

கருகிடும் செடியினில் பூக்கள்

காய்ந்திடும் உதிர்ந்திடும் தீக்கள்


ஆடுகள் மாடுகள் கூட்டம்

அரற்றிடும் வேதனை வாட்டம்

சூடுடன் புரண்டிடும் மண்ணும்

சுட்டிடும் கொதித்திடும் இன்னும்


வெக்கையில் வெந்திடும் உடலில்

வேர்வையின் சுடுநீர்க் கடலில்

நிக்கையில் நடக்கையில் தெப்பம்

நெருப்பெனும் சூரியன் வெப்பம்


வாழ்வினில் நடப்பதும் அதுவே

வருவதும் போவதும் இதுவே

துன்பமும் வாழ்க்கையில் இயற்கை

துயரினில்  வருந்துதல் மருட்கை 


ஒருமழை பெய்திடச்  சூடும் 

உருகிடும் விரைந்திடும் ஓடும்

மழையது கோடையில் குளிர்ச்சி

மாறிடும்  துன்பமும் ,  மகிழ்ச்சி

——————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...