சத்தம் இல்லாத யுத்தம் - கவிதை
———————-------------------------——-
கள்ளமிலா உள்ளத்தைக்
காட்டுகின்ற சிரிப்பு
வெள்ளமென வருகின்ற
விளையாட்டுப் பேச்சு
நல்லதொரு வேலையிலே
நாணயத்தின் நெருப்பு
வல்லமையின் உருவாக
வார்த்தெடுத்த பிறப்பு
துள்ளுமிளம் பருவத்தின்
தூய்மையிலே துடிப்பு
வள்ளுவரின் குறளாக
வந்திருக்கும் வனப்பு
சொல்லினிலும் செயலினிலும்
சுத்தத்தின் சிறப்பு
அள்ளிடினும் குறையாத
அன்பதனின் குவிப்பு
நித்தமெனை வாட்டுகின்ற
நித்திலத்தின் நினைப்பு
சத்தமிலா யுத்தமொன்றில்
சரணடைந்த தவிப்பு
—————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கவிதை வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு