திங்கள், 24 ஏப்ரல், 2023

போதி மரப் புத்தகங்கள் - கவிதை

 போதி மரப் புத்தகங்கள் - கவிதை 

————————————----------------------


மஞ்சள் பையோடு நடந்து போவது 

அது யார் , அப்பாவா


சங்கீத ஓசைக்குத் தலையாட்டிச் செல்வது

அது யார்,  தாத்தாவா


சிரங்குப் புண்ணுக்கு மருந்து தடவுவது

அது யார்,  அப்பத்தாவா


தோசையைச் சுட்டுத்  தட்டிலே வைப்பது

அது யார் , அம்மாச்சியா


திருக்குறள் பாடம் தெளிவாக நடத்துவது

அது யார்.  தமிழய்யாவா


புகைப்படல மாய்த்  தெரிந்து

போய் மறைந்து  போனாலும்


போதி மரப் புத்தகமாய்ப் 

புனர் வாழ்வு தந்தவர்கள்


——————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...