செவ்வாய், 4 ஏப்ரல், 2023

சொல்லத்தான் நினைக்கிறேன் - கவிதை

 சொல்லத்தான் நினைக்கிறேன் - கவிதை 

——————---------------------------------------------—

என்னமோ உலுக்கும்

எங்கேயோ இழுக்கும்

தன்னையே மறக்கும்

தவித்துப் பறக்கும்


சொல்லவே கூசும்

சுகத்தை வீசும்

துள்ளவே துடிக்கும்

துணிந்து கிடக்கும்


வேகமாய் நடக்கும்

விரைந்து கடக்கும்

தாகமாய்த் தவிக்கும்

தரைக்கும் புவிக்கும்


இருந்து கெடுக்கும்

ஏதோ  தடுக்கும்

விருந்தும் இருக்கும்

வேதனை உருக்கும்


இளமைக் காலம்

இன்பக்  கோலம்

சொல்ல நினைக்கும்

சொல்லாமல் இருக்கும்

———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...