புதன், 12 ஏப்ரல், 2023

நீ பாதி நான் பாதி - கவிதை

 நீ பாதி நான் பாதி - கவிதை 

————————------------------—

இடதா வலதா

என்பதெல்லாம் தெரியாது


உன்னில்  பாதியென்ற

உண்மை  மட்டும் தான்  தெரியும்


சேர்ந்த நாள் முதலாய்ச் 

சிதையும் நாள் வரைக்கும்


இன்பம் துன்பம் என்று

இருக்கும் எல்லாமே


பகிர்ந்து மகிழ்கின்ற

பக்குவம் தான் தெரியும்


——-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English  



1 கருத்து:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...