ஆனந்தம் ஆரம்பம் - கவிதை
———-------------------------------------—
எங்கோ ஒலிக்கின்ற
மணியின் ஓசை
இங்கே அழைக்கின்ற
கன்றின் ஆசை
மரத்தில் அசைகின்ற
இலையின் நாணம்
சுரத்தை இசைக்கின்ற
குயிலின் கானம்
சிரித்து மறைகின்ற
குருவிப் பார்வை
உரித்து உதிர்கின்ற
மலரின் போர்வை
தரையில் அடிக்கின்ற
தண்ணீர்த் தாளம்
விரைந்து முடிக்கின்ற
மாவுக் கோலம்
புதிதாய்ப் பூக்கின்ற
காலைப் பூவை
மெதுவாய்ப் பார்க்கின்ற
மனமே தேவை
——— நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பான கவிதை கவிஞரே
பதிலளிநீக்குரசனை அருமை...
பதிலளிநீக்கு