சனி, 29 ஏப்ரல், 2023

தேடிப் பார்க்கிறேன் - கவிதை

 தேடிப் பார்க்கிறேன் - கவிதை 

—————————--------------------—

பக்கெட்டுத் தண்ணீரோடு

பாத்ரூம் போகும் போது

கிராமத்துக் கண்மாயைத்

தேடிப் பார்க்கிறேன்


விசிறியின் வெப்பத்தில்

சிரமப் படும் போது

வேப்ப மரக் காற்றைத் 

தேடிப்  பார்க்கிறேன்


தார் ரோட்டின் கருப்பினில்

கண்கள் படும் போது

வயக்காட்டுப் பச்சையைத்

தேடிப் பார்க்கிறேன்


பஸ்ஸில் தொத்திப்

பயணிக்கும் போது

கூட்டு வண்டி வைக்கோலைத்

தேடிப் பார்க்கிறேன்


கல்லூரிப் பெஞ்சில்

கிறுக்கும் போது

ஆரம்பப் பள்ளி மணலைத்

தேடிப் பார்க்கிறேன்


ஒவ்வொரு மாற்றமும்

உணரும் போது

ஓடிப் போன சுகத்தைத்

தேடிப் பார்க்கிறேன்

————-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...