கனவுக் கணவன் - கவிதை
———————-------------------------—-
அவளின் அழகில்
அவனும் மயங்கி
அவனின் அடிதடியில்
அவளும் மயங்கி
கண்டதும் காதல்
கொண்டதும் குடும்பம்
கூட்டம் சேர்ந்திடக்
குடித்துத் திரிந்தான்
குடியின் போதையில்
மனைவியை அடித்தான்
அடிபட்ட மனைவி
ஓடிப் போனாள்
கூட்டிப் போனவனைக்
குத்திக் கொன்றான்
ஜெயிலின் கம்பியை
உடைத்துத் தப்பினான்
தீவீர வாதக்
கும்பலில் சேர்ந்தான்
போலீஸ் குண்டு
பாய்ந்து செத்தான்
சுடலைக் காட்டில்
பிணமாய் எரிந்தான்
கனவாய்ப் போன
காதற் கணவன்
—————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கொலவெறி கவிதையாக இருக்கிறது...
பதிலளிநீக்கு