தூதாக அனுப்புவேன் - கவிதை
————————---------------------------------—
எல்லா இடத்தினிலும்
இருக்கின்ற காரணத்தால்
காற்றைத்தான் தூதாக
அனுப்பவேண்டும்
கவலைகளை அவளிடம்
சொல்லச் சொல்லி
இந்தக் காரியங்களை அவளைச்
செய்யச் சொல்லி
அந்தச் சிவப்புச் சேலையை
இனிச் சீந்தாதே
அதில் சிக்கிப் போய்த்தானே
சிறைப்பட்டேன்
அந்த மர்மப் புன்னகையை
மறந்து விடேன்
அதில் மாட்டிக் கொண்டுதானே
மண்டியிட்டேன்
அந்த அன்ன நடையைக் கொஞ்சம்
மாற்றி விடேன்
அதில் பின்னிப் போய்த்தானே
பித்தனானேன்
அந்தப் பாட்டுக் குரலைக் கொஞ்சம்
அடக்கி வையேன்
அதைக் கேட்டுக் கேட்டுத் தானே
கெட்டுப் போனேன்
இதை மாற்ற முடியாதென்று
மனதில் பட்டால்
உன்னை மறந்து போவதற்கு
மார்க்கம் சொல்லேன்
—————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஓகோ...?
பதிலளிநீக்கு