அழகான நாட்கள் - கவிதை
————————-----------------—
அவள் பின்னாலேயே
சென்ற நாட்கள்
அவள் பின்னலுக்குள்
சிக்கிய நாட்கள்
அவள் குரலுக்குள்
எவ்வளவு காந்தம்
அந்தப் பார்வைக்குள்
எவ்வளவு பாந்தம்
அவள் வராவிட்டால்
வந்துவிடும் கண்ணீர்
அவள் வந்துவிட்டால்
உள்ளத்தில் உவகை
மறுபடி சந்திக்கும்
நாளுக்கு ஏக்கம்
அப்போது ஏற்படும்
அழுகைக்கு வெட்கம்
எத்தனை நாட்கள்
இன்பத்தின் பூக்கள்
அத்தனை நாட்களும்
அழகான நாட்கள்
—————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு