ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

தேனாய் இனிக்கிறது - கவிதை

 தேனாய் இனிக்கிறது - கவிதை 


————————--------------------------—-

அம்மன் சாமிக்கு

அமைந்த வாகனங்கள்

ஒளிந்து விளையாட

ஏற்ற மறைவிடங்கள்


கோயில் குளத்துக்குள்

குட்டிக் கோபுரங்கள்

ஏறிக் குதிப்பதற்கு

ஏற்ற கும்பங்கள்


தோப்புத் துரவுக்குள்

கொடுக்காப் புளிமரங்கள்

தாவிக் குலுக்கக்

கொட்டும் புளிக்காய்கள்


ஓதுவார் குரலும்

ஒலிக்கும் தவிலும்

சுண்டல் வாசமும்

சுண்டி இழுக்கும்


கோயில் ஊரில்

குழந்தைப் பருவம்

தேனாய் இனிக்கும்

திரும்பாப் பருவம்


—————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...