சொந்தம் இல்லாத பந்தம் - கவிதை
——————————---------------------------——
அவள் வீட்டுக்குப்
பக்கத்தில் இருக்கும்
பால்க் கடைக்காரனிடம்
பந்தம்
அவள் பழங்கள்
வாங்கப் போகும்
பழக் கடைக்காரனிடம்
பந்தம்
அவள் ஏறுகின்ற
அந்தப் பஸ்ஸ்டாண்டில்
படக் கடைக்காரனிடம்
பந்தம்
அவள் செல்கின்ற
எல்லா இடங்களிலும்
எல்லாக் கடைகளிலும்
பந்தம்
சேரும் சொந்தமென்று
செலவான காலத்தை
ஜெயிக்க வைக்குமா
பந்தம்
பார்த்து ரசிப்பதற்குப்
பாதி இடம் தந்த
சொந்தம் இல்லாத
பந்தம்
—————————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு