திங்கள், 17 ஏப்ரல், 2023

அவளின்றி அமையாது என் உலகம் - கவிதை

 அவளின்றி அமையாது என் உலகம் - கவிதை 

———————————————----------------------------

கூடப் படித்தபோது

சடை பிடித்து இழுத்ததிலும்


குடத்தோடு வரும்போது

கொட்டி விட்டுப் பார்த்ததிலும்


கல்லூரி அறையினிலே 

பக்கத்தில் அமர்ந்ததிலும்


வேலைக்குப் போனபோது

சேர்ந்து சென்ற பயணத்திலும்


கல்யாணம் ஆனபோது

முதலிரவில் நடந்ததிலும்


குழந்தைகள் கூட வர

திருவிழாவில் திரிந்ததிலும்


வயதாகித் தளர்ந்தபோது

வந்து தரும் மருந்தினிலும்


குளத்துத் தண்ணீரில்

விட்டெறிந்த சில்லுகளால்


சுற்றிச் சுற்றி வரும்

நினைவுகளின் வளையமாக


அவளின்றி அமையாது

என்றுமே என் உலகம்

————-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...