ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

கள்ளியிலும் அகில் பிறக்கும் - கவிதை

 கள்ளியிலும் அகில் பிறக்கும் - கவிதை 

—————————————-------------------------------

கள்ளியிலும் அகில் பிறந்த

கதைகள் பல உண்டு


உழைப்பால் உயர்ந்திட்ட

உத்தமரின் கதைகள் அவை


வறுமையில் உழன்றாலும்

வன்முறையில்  சுழன்றாலும் 


முயற்சி தளராமல்

முன்னேறி உயர்ந்ததற்கு 


சரித்திரப் பாடத்தில்

சாட்சிகள் பல உண்டு


சூழ்நிலைக் கள்ளியைக்

கிள்ளி எறிந்து விட்டு


சுயத்தின் அகிலாகி

சுற்றும்  மணம் ஆவோம் 


—————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...