கரை தொடா அலைகள் - கவிதை
—————————--------------------------—
நேரத்திற்குத் தூரம் அறிமுகம்
நினைப்புக்கு ஈரம் அறிமுகம்
உணவுக்கு வெறுப்பு அறிமுகம்
உறக்கத்திற்கு விடுதலை அறிமுகம்
வார்த்தைக்கு மவுனம் அறிமுகம்
வாழ்க்கைக்கு வறட்சி அறிமுகம்
அன்றைக்கு அவளின் அறிமுகம்
இன்றைக்கு இழப்பு அறிமுகம்
கரை தொடாத அலைகளாகக்
காதலுக்குக் கண்ணீர் அறிமுகம்
——————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை
பதிலளிநீக்கு