விதைக்கப்பட்டவன் - கவிதை
—————————-----------------------—
பொறுப்பான கணவனாய்ப்
பூவான தந்தையாய்
விருப்பான மனிதனாய்
விளைந்திட்ட ஆண் மகன்
நெருப்பான அறிவொன்று
நிறைவாக இருப்பதால்
விருப்பங்கள் விண்முட்டி
விளையாடிப் பார்ப்பவன்
திருப்பங்கள் வாழ்க்கையில்
திடும்மென்று நேர்கையில்
வருத்தத்தில் வாடாமல்
வாழ்க்கையில் வெல்பவன்
சிரிப்புக்கு முகமென்றும்
சிந்தனைக்கு அகமென்றும்
பொறுப்பாகச் சேர்த்திட்டு
புதுமையைப் படைப்பவன்
இருப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட காலத்தில்
சிறப்புக்குப் பூமியில்
விதைக்கப் பட்டவன்
————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
உண்மை...
பதிலளிநீக்கு