தேவைகளைத் தேடாத தேர்வுகள் - கவிதை
——————————————--------------------------—-
தேர்வு செய்யும் போதினிலே
தேவையினைத் தேடாத
மனமொன்று வாய்ப்பதற்கு
மார்க்கமுண்டா உலகினிலே
கனி கொடுக்கும் மரத்திற்குப்
பசி எடுத்தால் பறிப்பதில்லை
குயில் பாடும் பாட்டுக்கு
அது ரசித்து ஆடவில்லை
வீசுகின்ற காற்றுக்கு
வேர்வை வந்து வீசவில்லை
மற்றவர்க்காய் வாழுகின்ற
மனமொன்று வாய்த்து விட்டால்
தேவைகளைத் தேடுகின்ற
தேர்வுக்கு இடமில்லை
—————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பு...
பதிலளிநீக்கு