திங்கள், 10 ஏப்ரல், 2023

கை நிறையக் காசுகள் - கவிதை

 கை நிறையக் காசுகள் - கவிதை 

——————————----------------------—

மூச்சுத் தடுமாறித் 

திணறும் நேரம்

நினைவில் வந்து

நிற்கும்  காட்சிகள்


புத்தகப் பையைத்

தூக்கி வந்த அப்பா

தயிர் சாதத்தை

ஊட்டி விட்ட அம்மா


விடுதி அறையில்

அரட்டை நண்பர்

அலுவலக அறையில்

ஆடிய பிரச்னைகள்


திருமண விழாவில்

பேச்சு சொந்தம்

முதல் இரவில்

மயங்கிய மனைவி


மதிப்பெண் அட்டை

முதலிட மகன்

பின்னல் பூவில்

சிரித்த மகள்


உடம்பு சரியான

உடனே மறக்கும்

கைநிறைக் காசின்

கணக்கைப் பார்க்கும்


————-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...