மழைக் கோலம் - கவிதை
---------------------------------------------------
தரையைத் தாக்கும்
தண்ணீர் அம்பு
கரையை உடைக்கும்
கண்மாய்த் தெம்பு
ஒலியும் ஒளியும்
காட்டும் மேகம்
பிழியும் நீரில்
சேரும் சகதி
இலையும் பூவும்
மழையில் ஆட
தலையை விரித்து
ஆடும் மரங்கள்
வீட்டுக் கூரை
விரிசல் எடுக்கும்
பாட்டுப் பாடும்
பாத்திரம் கேட்கும்
அளவாய்ப் பெய்தால்
ஆக்கம் ஆகும்
பிளவாய்ப் பெய்தால்
பிழையாய்ப் போகும்
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சூப்பர் கவிஞரே மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
பதிலளிநீக்குஎடுப்பதூஉம் எல்லாம் மழை