எப்போதும் மாறாது - கவிதை
————————-----------------------—-
முளைக்கொட்டு உத்சவத்தில்
பூப்பாரி தூக்கையிலே
முடியாம தவிக்கையிலே
கைகொடுக்க விழுந்தேனா
ஊருணிக்குக் குடத்தோட
குடிதண்ணி சுமக்கையிலே
பின்னாடி துணையாக
நடக்கையிலே விழுந்தேனா
கம்மாக் கரைச் சகதியிலே
கால் வழுக்க இருந்தவளை
கட்டிக் கொண்ட நேரத்திலே
கப்புன்னு விழுந்தேனா
கால்கடுக்க வரிசையிலே
சினிமாவுக்கு நிக்கையிலே
ரெண்டு டிக்கெட் வாங்கி வந்து
கொடுக்கையிலே விழுந்தேனா
எப்போ விழுந்தேன்னு
எனக்கே தெரியாது
எப்போதும் மாறாத
காதலுன்னு தான் தெரியும்
————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஆகா...!
பதிலளிநீக்கு