ஞாயிறு, 26 மார்ச், 2023

இனிய உறவு பூத்தது - கவிதை

 இனிய உறவு பூத்தது - கவிதை 

————————-------------------------—-

மொட்டுக்குள் பொங்கி வரும்

பூவின் வாசம்

மெட்டுக்குள் தங்கி வரும்

இசையின் நேசம்


கட்டுக்குள் அடங்காத

கன்றின் மென்மை

பட்டுக்குப் போர்த்திட்ட

பஞ்சின் தன்மை


மேகத்தில் விளையாடும்

மின்னல் கீற்று

தாகத்தைத் தணிக்கின்ற

தண்ணீர் ஊற்று


தேகத்தில் தேன்பாய்ச்சும்

தென்றல் காற்று

யோகத்தில் வளர்கின்ற

அமைதி நாற்று


இறைவனே படைத்திட்ட

இன்பச் சோறு

இனிதாகப் பூத்திட்ட

குழந்தைப் பேறு

——————நாகேந்திர பாரதி

 My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...