சனி, 25 மார்ச், 2023

உனக்காக நான் இருப்பேன் - கவிதை

 உனக்காக நான் இருப்பேன் - கவிதை 

———————————-----------------------——-

வளர்த்த உறவுகள்

வளர்த்து விட்டுப் போயாச்சு

வளர்ந்த உறவுகள்

வாழ்க்கைப்பட்டுப் போயாச்சு


வந்த உறவுகளில்

போனவை சில

பொருந்தியவை சில


தந்த உறவுகளில்

தாங்கியவை சில

தளர்ந்தவை சில


வரவுகளை வைத்து

வாழ்ந்தவை சில

செலவுகளில் சேர்ந்து

சிதைந்தவை சில


நேற்றிருந்து இன்றிருந்து

நாளையும் கூட

நினைவிலும் நேரிலும்

நிற்பது ஒன்றே


உனக்காக இருப்பேன்

ஓயாமல் நானென்று

ஒன்றிப் போன

தாலியின் உறவு

————நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...