நடிகை நாட்கள் - கவிதை
-------------------------------------------------
நடிகை வாழ்வின்
நாட்கள் இவையோ
அழகை விற்ற
ஆரம்ப நாட்கள்
நடிப்பைக் கற்ற
நளின நாட்கள்
புகழில் மயங்கி
புரண்ட நாட்கள்
பணத்தில் குளித்த
பரவச நாட்கள்
காதலில் தோற்ற
கண்ணீர் நாட்கள்
கணவனைத் தேடிக்
கண்ட நாட்கள்
கூட்டம் கலைந்த
கொடிய நாட்கள்
ஆட்டம் முடிந்த
அமைதி நாட்கள்
தளர்ந்து கிடக்கும்
தனிமை நாட்கள்
----------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
துயரம்...
பதிலளிநீக்கு