காற்றின் கதை - கவிதை
--------------------------------------------
மழையில் கலந்து அடிப்பதும் காற்று
மயங்கித் தரையில் துடிப்பதும் காற்று
மணலை வாரி இறைப்பதும் காற்று
மண்ணில் கோலம் வரைவதும் காற்று
கடலைப் பொங்கச் செய்வதும் காற்று
கரையில் நுரையைத் தள்ளுதல் காற்று
சூறா வளியாய்ச் சுற்றிடும் காற்று
சுகமாய்த் தென்றலாய் வீசிடும் காற்று
மரத்தை ஒடித்துச் சிதைப்பதும் காற்று
மணமாய்ப் பூக்களில் மிதப்பதும் காற்று
பழுத்த பயிரில் ஆடிடும் காற்று
பதராய் மாறி ஓடிடும் காற்று
கோடையில் அனலாய்க் கொதிப்பதும் காற்று
குளிர்ந்த இரவாய் மாறிடும் காற்று
காலையில் குளிராய் நடுக்கிடும் காற்று
கடுவெயில் வேர்வை அடக்கிடும் காற்று
உயிராய் உள்ளே இருப்பதும் காற்று
உடலை விட்டுப் பறப்பதும் காற்று
உள்ளே வெளியே எங்கும் காற்று
ஒன்றாய் இறைவன் தங்கும் காற்று
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பு...
பதிலளிநீக்கு