மௌனம் - கவிதை
--------------------------------------
மௌனம் மந்திரம்
சொற்களுக்கு உபதேசி
வடிகட்டிய வார்த்தைகளில்
வலிமை அதிகம்
மௌனம் ஏரிநீர்
அளைக்காமல் உற்றுப்பார்
அடிவாரம் வரை புரியும்
மௌனம் தேன்கூடு
கலைக்காமல் கவனி
'கொட்டு'வது தேன் மட்டும்
மௌனம் மின்சாரம்
ஓடுவது தெரியாது
உணர்ந்தாலோ
பலன் கோடி, பல கோடி
-------------------------------------நாகேந்திர பாரதி
உங்கள் கவிதைகள் எப்பவும் தனித்தன்மையாகவே இருக்கும்... அருமை.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குவடிகட்டிய வார்தைகளுக்கு வலிமை அதிகம் உண்மைதான் ஐயா வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருத்திக் காட்டுப் பெண்ணே: என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே. சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா. ...
அன்புடன்
த.ரூபன்
அருமை...
பதிலளிநீக்குகவிதை சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்கு