வியாழன், 24 செப்டம்பர், 2020

மௌனத்தின் சப்தம் - கவிதை

 மௌனத்தின் சப்தம் - கவிதை 

-----------------------------------------------------

இலைகளின் மௌன சப்தம் 

வேர்களை நீள  வைக்கும் 


சிலைகளின் மௌன சப்தம் 

சிற்பியைப் பேச வைக்கும் 


வறுமையின் மௌன சப்தம் 

புரட்சியைப் பூக்க வைக்கும் 


கருமையின் மௌன சப்தம் 

வெண்மையை விளங்க வைக்கும் 


இயற்கையின் மௌன சப்தம் 

உலகினை இயங்க வைக்கும் 


மௌனத்தின் மௌன சப்தம் 

மனதினை  மலர வைக்கும் 

-------------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English

7 கருத்துகள்:

 1. மௌனத்தின் மௌன சப்தம் - மௌனமும் சப்தமும் முரணாக இருந்தாலும் கவிதையை ரசிக்க முடிந்தது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. மௌனத்தின் சப்தமான நிசப்தம் தியானம் செய்யும்போது வந்து சேர்ந்து நம் மனதை அமைதி அடைய செய்யும் என்ற எண்ணத்தில் எழுதி உள்ளேன். நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையே சிற்பியிடம் மௌனத்தில் பேசி தன்னை வெளிக்கொண்டு வருமாறு சொல்லுவதாக நினைத்து எழுதியுள்ளேன். நன்றி.

   நீக்கு