வியாழன், 17 செப்டம்பர், 2020

பழைய வீடு - கவிதை

 பழைய வீடு - கவிதை 

--------------------------------------

அப்பத்தா சிலுக்கெடுத்த 

முற்றத்தைக் காணோம் 


அம்மாச்சி தோசை சுட்ட 

அடுப்படியைக் காணோம் 


தாத்தா படுத்திருந்த 

படுக்கையறை காணோம் 


சின்னம்மாக்கள் விளையாடிய 

திண்ணையைக் காணோம் 


உறவுகளால் கட்டிய 

செங்கல் வீடு 


உரு மாறி  இப்போது 

சிமெண்டு வீடாய் 

--------------------------நாகேந்திர பாரதி 

My E-books in Tamil and English

1 கருத்து:

  1. உருமாறிய வீடுகள் - நினைவுகள் மட்டும் நீங்காமல்....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு